×

ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசு தடையை நீக்க வேண்டும் மாணிக்கம் தாகூர் எம்பி கோரிக்கை

விருதுநகர், நவ.4: விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலட்க்கு அனுப்பி உள்ள கடிதம்: ராஜஸ்தான் மாநிலத்தில் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மறு பரிசீலனை செய்ய வேண்டும். ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராகு சர்மாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிவகாசி பட்டா தடையை நீக்குமாறு கேட்டுள்ளேன். மேலும் தீபாவளி பண்டிகை தின நாளை நாடு முழுவதும் மகிழ்ச்சியான பண்டிகையாக மாற்ற சிவகாசி தொழிலாளர்கள் 364 நாட்கள் வேலை செய்கின்றனர். தமிழக சிவகாசி மக்கள் வாழ்வாதாரத்தை காக்க உதவ வேண்டும். கொரோனா வைரஸினால் பட்டாசு உற்பத்தி தொழில் துறை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

மேலும் வரவிருக்கும் பண்டிகை காலத்துடன் சிவகாசி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையை மீட்டு வர கடுமையான போராட்டத்தில் உள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் சிறு வர்த்தகர்கள் பலர் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று முன்கூட்டி ஆர்டர்கள் கொடுத்து பட்டாசு வாங்கி உள்ளனர். கொரோனாவால் ஏற்கனவே மந்த நிலையில் தொழில்கள் இருப்பதால் ராஜஸ்தான் அரசு தடை விதிக்கும் முடிவை மாற்றி அமைக்க வேண்டும். வர்த்தகர்கள் முற்றிலும் பாதிப்பிற்கு உள்ளாவர்கள். குறு, சிறு வணிகர்கள் மற்றும் பசுமை பட்டாசு தயாரிப்பாளர்களின் நலனுக்காக பட்டாசு தடை முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தீபாவளி பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட வழி செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Tags : Manikkam Tagore ,removal ,Rajasthan ,
× RELATED எலிமினேட்டரில் இன்று ‘ராயல்ஸ்’ பலப்பரீட்சை: வெற்றி அல்லது வெளியேற்றம்